தேவையான பொருட்கள்

25minits
3 பரிமாறுவது
  1. 4முட்டை
  2. 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  3. 1 டேபிள்ஸ்பூன் மைதா
  4. 1 டேபிள்ஸ்பூன் கான்பிளவர்
  5. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 வெங்காயம்
  7. பாதி குடைமிளகாய்
  8. 8பல் பூண்டு
  9. 2 டேபிள்ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  10. 11/2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
  11. சிறிதளவுகொத்தமல்லி இலை
  12. தேவையான அளவு உப்பு
  13. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25minits
  1. 1

    முதலில் 4 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி அதில் மிளகுத்தூள்

  2. 2

    சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்த முட்டையை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்

  3. 3

    பிறகு வேக வைத்து எடுத்த முட்டையை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து

  4. 4

    ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒரு வட சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும் பிறகு தாளிப்பதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு ஒரு வட சட்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டை வதக்கவும் பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  7. 7

    வெங்காயம் வதங்கிய பிறகு குடை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்

  8. 8

    டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்

  9. 9

    பிறகு அதில் பொரித்து வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து

  10. 10

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த எக் மஞ்சூரியன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes