எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. கேக் செய்ய:
  2. 200 கிராம் மைதா
  3. 20 கிராம் கார்ன் ப்ளார்
  4. 20 கிராம் பால் பவுடர்
  5. 2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 200 கிராம் சர்க்கரை
  8. 200 கிராம் நாட்டுக்கோழி முட்டை
  9. 200 கிராம் உப்பில்லாத வெண்ணெய்
  10. 2 ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  11. 50 மில்லி பால்
  12. கேரமல் சாஸ் செய்ய:
  13. 1 கப் சர்க்கரை
  14. 1/2 கப் ப்ரஷ் க்ரீம்
  15. 1/4 கப் சுடு தண்ணீர்
  16. 2 டேபிள்ஸ்பூன் உப்பில்லாத வெண்ணெய்
  17. அலங்கரிக்க:
  18. 1/2 கப் சுகர் சிரப்
  19. கலர் ஸ்பிரிங்கல்ஸ் சிறிது
  20. 1 செர்ரி 🍒

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    கேக் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து அளந்து கொள்ளவும்

  2. 2

    சர்க்கரை ஐ மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் பட்டரை டபுள்பாயில் முறையில் உருக்கி கொள்ளவும் மைதா கார்ன்ப்ளார் பால் பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று முறை நன்றாக ஜலித்து கொள்ளவும்

  3. 3

    பின் முட்டையை உடைத்து ஊற்றி இரண்டு நிமிடம் வரை பீட் செய்யவும் பின் வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் பீட் செய்யவும்

  4. 4

    பின் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  5. 5

    பின் பீட் செய்ய செய்ய முட்டை நன்கு வெள்ளை நிறத்தில் க்ரீமியா ரிப்பன் பதத்தில் வரும் அப்போது பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு ஒரு கரண்டியால் கிளறவும் அடித்து கலக்க கூடாது முட்டை அடித்த பதம் முக்கியம் ஒருபுறமாக கலக்க வேண்டும்

  6. 6

    மாவை கலந்த பின் உருக்கிய வெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    பின் சூடான பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  8. 8

    நன்கு ஸ்மூத்தாக க்ரீமியா கலந்து கொள்ளவும் பின் வெண்ணெய் தடவி மைதா டஸ்ட் செய்து பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றி தட்டி விடவும்

  9. 9

    பின் 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடான ஓவனில் வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 45_50 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

    கேக் வெந்ததை டூத் பிக் கொண்டு நடுவில் குத்தி பார்த்து ஒட்டாமல் வருவது பதம்

    பின் ட்ரேயை எடுத்து வெளியே வைக்கவும் பதினைந்து நிமிடம் வரை ஆறவிடவும்

  10. 10

    பின் சற்று ஆறியதும் ட்ரேயில் இருந்து கேக்கை திருப்பி பட்டர் பேப்பரை மெதுவாக எடுக்கவும் நன்றாக ஆறவிடவும்

  11. 11

    கேரமல் சாஸ் செய்ய:

    சர்க்கரை ஐ வெறும் கடாயில் போட்டு கிளறவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கிளறவும் சர்க்கரை கரைந்து உருகி வரும்

  12. 12

    தேன் கலர் வந்ததும் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்

  13. 13

    பின் பட்டரை சேர்த்து கிளறவும் பின் ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறவும் சில சமயம் திரிந்தது போல் தெரியும் பயப்பட வேண்டாம் தொடர்ந்து கிளற கிளற சரியாக விடும்

    அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கிளறுங்கள் அதிக தீயில் வைத்து கிளறினால் கேரமல் தீய்ந்து கசப்பாக இருக்கும்

  14. 14

    நல்லா க்ரீமியா பளபளவென்று வரும் போது இறக்கி ஆறவிடவும்

  15. 15

    பின் ஆறவைத்த கேக் மேல் டூத் பிக் கொண்டு ஆங்காங்கே துளையிட்டு சர்க்கரை பாகை ஊற்றவும் பின் ரெடியாக உள்ள கேரமலை ஊற்றவும் பின் அரை மணியில் இருந்து முக்கால் மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும் பீரீசரில் வேண்டாம் பின் கேக்கை கேக் ப்ளேட்டிற்கு மாற்றவும் ஊற்றும் போது வழிவது போல் தெரியும் பிரிட்ஜில் வைத்த பின் சரியான பக்குவத்தில் இருக்கும்

    பின் அதன் மேல் கலர் ஸ்பிரிங்கல்ஸை தூவி விடவும்

  16. 16

    அதன் மேல் நறுக்கிய செர்ரி 🍒 வைத்து அலங்கரிக்கவும்

  17. 17

    சுவையான ஆரோக்கியமான பட்டர் கேக் ரெடி கேரமல் சாஸ் உடன் கேக் ரெடி

  18. 18

    கேரமல் சாஸ் மட்டும் கவனமாக செய்ய வேண்டும் கொஞ்சம் கருக விட்டாலும் கசப்பு வந்துவிடும் பதமும் மிகவும் முக்கியமானது கட் செய்யும் போது வழியாம சரியான பதத்தில் இருக்க வேண்டும் சாஸ் உடன் சாப்பிடும் போது மிகவும் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes