எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் கேழ்வரகு மாவு
  2. 2 கப் தண்ணீர்
  3. 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்/ நெய்
  4. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    1 3/4 கப் தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் உப்பு மற்றும் நெய் சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    ஒரு சிறு கிண்ணத்தில் 1/4 கப் தண்ணீரில் 1 மேசைக்கரண்டி கேழ்வரகு மாவினை கட்டி சேராதவாறு கலந்து, அதை கொதிக்கும் நீரில் ஊற்றவும்

  3. 3

    அது நன்றாக கொதித்தவுடன் மீதமுள்ள கேழ்வரகு மாவினை சேர்த்து, பாத்திரத்தை மூடி ஒரு நிமிடம் வேக விடவும்

  4. 4

    பின் கட்டி சேராதவாறு இடைவிடாமல் கிளரவும்

  5. 5

    களி பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு திரண்டு வரும் வரை கிளரவும், களி தயார்

  6. 6

    இப்பொழுது கை பொறுக்கும் சூட்டில் உள்ளங்கைகளில் சிறிது நெய் அல்லது நீரைத்தடவி உருண்டைகளாக உருட்டவும்

  7. 7

    சூடான சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன் சத்தான களி உருண்டைகளைப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakkiya
Ilakkiya @Ilakkiya
அன்று

Similar Recipes