எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1கப் பால் பவுடர்
  3. 1/2கப் வெள்ளை/நாட்டு சர்க்கரை
  4. 2-3ஏலக்காய்
  5. 1/2கப் பாதம்
  6. 1/4கப் வேர்க்கடலை

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வேர்கடலையின் தோல் நீக்கி வைக்கவும்.

  2. 2

    வெறும் வாணலியில் கோதுமை மாவு சேர்த்து,5நிமிடங்களுக்கு நன்றாக கலர் மாறும் வரை வறுக்கவும்.

  3. 3

    பின் பாதம் சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    ஆறிய பாதம் பருப்பை,மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் வேர்க்கடலை,சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.

  5. 5

    வெகு நேரம் அரைத்தால், வேர்க்கடலையில் இருந்து எண்ணெய் வந்தது போல் ஆகிவிடும்.கவனத்தில் கொள்ளவும்.

  6. 6

    ஒரு பெரிய பாத்திரத்தில், கோதுமை மாவு சேர்த்து அதனுடன் பால் பவுடர் மற்றும் அரைத்த பவுடர் சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து விடவும். இவ்வாறு செய்யும் பொழுது எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்து விடும்.

  7. 7

    இதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்த வேண்டும்.

  8. 8

    ஒரு டம்ளரில் 1டேபிள் ஸ்பூன் அரைத்த பொடி சேர்த்து நல்ல சூடான ஒரு டம்ளர் பால் மற்றும் சுவைக்கேற்ப சர்க்கரை(குறைவாகத்தான் தேவைப்படும்) நன்றாக கலந்து பருகவும்.

  9. 9

    அரைத்த பாதாம் பவுடர்,கோதுமை மாவு மற்றும் பால் பவுடர் அளவுக்கு மையாக இருக்காது.எனவே சலிக்க முடியாது.

    எனவே,பாலில் சேர்க்கும்பொழுது முழுவதும் கரையாத காரணத்தினால், குழந்தைகளுக்குக் கொடுத்தால் வடிகட்டி கொடுக்கவும்.நாம் அப்படியே பருகலாம்.

  10. 10

    இது,பாதம் பால் போன்று பாதாம் வாசனை நன்றாக இருக்கும்.பாதம் வாசனை குறைவாக வேண்டுமென விரும்புவர்கள் 1/4கப் சேர்த்தால் போதுமானது.

  11. 11

    அவ்வளவுதான். சுவையான,சத்து மாவு பாதாம் பவுடர் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Ama sis.ithu Horlicks ku bathila nama veetla seirathu.Amma ku senji kuduthen. Nala flavour nu sonanga.ஏலக்காய் smell romaba virumbamatanga.so kammiya podu next time nu sonanga. So neenga 1 r 2 use panunga.
Milk la Cook Pani kudukra mathiri venumna,protein powder and milk potruken parunga,sis.en paian and enaku nu seithen. romba nalaarukum.

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes