எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3வேக வைத்த முட்டை
  2. 1(பெரியது)வேக வைத்த உருளை கிழங்கு
  3. 1பெரிய வெங்காயம்-(பொடியாக நறுக்கியது.)
  4. 1பச்சை மிளகாய்-(பொடியாக நறுக்கியது
  5. 1/2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. 1 சிறிய துண்டுஇஞ்சி -
  7. 1/2 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா தூள்-
  8. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகு தூள்-
  9. 1 கப்கொத்த மல்லி-
  10. தே. அளவுஎண்ணெய்
  11. 1 கப்பிரெட் கரம்பஸ்
  12. தே. அளவுஉப்பு-

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் 2 முட்டை மற்றும் உருளை கிழங்கை வேகவைத்து தோலை உரித்து கொள்ளவும்.உருளை கிழங்கை மசித்து கொள்ளவும்.முட்டையை இரண்டாக கட் செய்து கொள்ளவும்.

  2. 2

    முட்டையின் மஞ்சள் கருவை தனியாக எடுத்து மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
    காய்ந்ததும் பெரிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,நறுக்கிய பச்சை மிளகாய்,நறுக்கிய இஞ்சி,கரம் மசாலா தூள்,மிளகு தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். இந்த கலவையை மசித்த உருளைக்கிழங்கு,மஞ்சள் கரு வுடன் சேர்க்கவும்.சிறிது உப்பு,கொத்த மல்லி சேர்த்து mix செய்து கொள்ளவும்.

  4. 4

    கட்லெட் ஸ்டப் செய்முறை. 1.உருளை கிழங்கு- முட்டை மஞ்சள் கரு- மசாலா கலவை. 2. முட்டை வெள்ளை கரு.

  5. 5

    உருளை கிழங்கை வைத்து முட்டை வெள்ளை கருவை உள்ளே வைத்து ஸ்டப் செய்து கொள்ளவும்.ஒரு முட்டையை உடைத்து அடித்து வைத்து கொள்ளவும்.

  6. 6

    டீப் ஃபிரை அல்லது பான் ஃபிரை. stuff செய்த கட்லெட் ஐ பீட் செய்த முட்டையில் டிப் செய்து பிரெட் கிரம்பஸ் இல் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். நீங்கள் பான் பிறை செய்தால் ஒரு பக்கம் வெந்தவுடன் அப்பள இடுக்கி வைத்து திருப்பி கொள்ளவும்.எல்லா பக்கமும் நன்றாக வேக வைத்து பிரவுன் கலர் வரவும் எடுத்து தக்காளி அல்லது சில்லி sauce உடன் பரிமாறலாம்.

  7. 7

    குட்டீஸ்களுக்கு பிடித்த முட்டை கட்லெட் தயார்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Deepa
Deepa @cook_18411244
அன்று

Similar Recipes