எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100கிராம் துவரம் பருப்பு
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 4 காய்ந்த மிளகாய்
  5. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. சிறிதளவுகொத்தமல்லி
  8. சிறிதளவுபெருங்காயத்தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 3 பல் பூண்டு
  11. சிறியஎலுமிச்சை பழ அளவு புளி
  12. 1ஸ்பூன் கடுகு
  13. 1ஸ்பூன் சீரகம்
  14. 3ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    குக்கரில் பருப்பு, பூண்டு பல் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.ஒரு பவுலில் புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைசலை வடிகட்டி வைக்கவும்.

  2. 2

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் இரண்டாக கிள்ளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் மசித்து வைத்த பருப்பை ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.

  4. 4

    பருப்பு ஒரு கொதி வந்ததும் புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு கொதிக்க விடவும்.

  5. 5

    கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும், சுவையான மிளகாய் கிள்ளி சாம்பார் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes