மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. சாம்பார் தேவையான பொருட்கள்:-
  2. 100 கிராம் துவரம் பருப்பு
  3. 2 முருங்கைக்காய்
  4. 2 தக்காளி
  5. 1 வெங்காயம்
  6. 2 வர மிளகாய்
  7. கருவேப்பிலை, கொத்துமல்லி இலை சிறிதளவு
  8. 1/2 ஸ்பூன் வெந்தயம், சீரகம்
  9. 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள்
  10. 3 எண்ணெய்
  11. 1/2 ஸ்பூன் கடுகு
  12. புளி சிறிதளவு
  13. 3 ஸ்பூன் சாம்பார் தூள்
  14. ரசம் தேவையான பொருட்கள்:-
  15. 3 தக்காளி
  16. 2 ஸ்பூன் எண்ணெய்
  17. 1/2 ஸ்பூன் கடுகு
  18. 1 ஸ்பூன் சீரகம்
  19. 2 காய்ந்த மிளகாய்
  20. 1ஸ்பூன் முழு மிளகு
  21. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
  22. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  23. புளி சிறிதளவு
  24. புளி குழம்பு தேவையான பொருட்கள்:-
  25. 1/4 கிலோ கத்திரிக்காய்
  26. 3 தக்காளி
  27. 1/2 கப் சின்ன வெங்காயம்
  28. 4 பல் பூண்டு
  29. 3 காய்ந்த மிளகாய்
  30. 2 ஸ்பூன் சீரகம்
  31. கருவேப்பிலை, கொத்துமல்லி இலை
  32. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  33. 2 ஸ்பூன் சாம்பார் தூள்
  34. 4 ஸ்பூன் கொத்தமல்லி பொடி
  35. புளி சிறிதளவு
  36. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  37. 4 பத்தை தேங்காய்
  38. 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  39. 1/2 ஸ்பூன் கடுகு
  40. வெண்டைக்காய் பொரியல் செய்ய:-
  41. 500 கிராம் வெண்டைக்காய்
  42. 2 பெரிய வெங்காயம்
  43. 1 தக்காளி
  44. 1ஸ்பூன் சாம்பார் தூள்
  45. உப்பு தேவையான அளவு
  46. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  47. 1ஸ்பூன்மிளகாய்த்தூள்
  48. 1/2 கப் தேங்காய் துருவல்
  49. 5 ஸ்பூன் எண்ணெய்
  50. 1/2 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பிரஷர் குக்கர்'ரில், தேவையான அளவு தண்ணீர், துவரம் பருப்பு போட்டு 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், பெரிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கிய பிறகு முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும். பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து அதில் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் புளிக்கரைசல் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். 10 நிமிடம் கழித்து கொத்தமால்லி இலை சேர்க்கவும்.

  2. 2

    அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 2 நிமிடம் கழித்து இதில் உப்பு சேர்த்து கிளறவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு வெண்டைக்காய் சேர்த்து வெண்டைக்காய் முழுமையாக வெந்ததும் இதில், தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும.

  3. 3

    அடுத்தது ரசம் செய்ய:- வேகவைத்த தக்காளி, புளி,பருப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு கல்லில் சீரகம்,முழு மிளகு, காய்ந்த மிளகாய், பூண்டு, இடித்து கொள்ளவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு,கருவேப்பிலை, இடித்து வைத்ததை சேர்த்து வதக்கவும். ரசத்தை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

  4. 4

    கத்தரிக்காய் புளி குழம்பு:- ஒரு கடாயில் எண்ணெய்
    சூடானதும் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், மற்றும் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி பொடி, சாம்பார்தூள் சேர்த்து கலந்து விடவும். ஆறவிடவும் பிறகு மிக்ஸியில் தேங்காய் துண்டுகள்புளி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடுத்தது ஒரு வாணலியில் நால்லெண்ணை ஊற்றி, கத்திரிக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த விழுதை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்

  5. 5

    மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes