மினி சாம்பார் நெய்இட்லி

Aalayamani B
Aalayamani B @cook_19909202

#goldenapron3
#இட்லி வகைகள்.
எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேருக்கு
  1. இட்லி அரிசி 2 கப்
  2. உளுத்தம் பருப்பு அரை கப்
  3. பச்சரிசி கால் கப்
  4. உப்பு 4 ஸ்பூன்
  5. சாம்பாருக்கு தேவையானவை
  6. துவரம்பருப்பு பாசிப்பருப்பு தலா கால் கப்
  7. சாம்பார் வெங்காயம் 15
  8. பச்சை மிளகாய்-2
  9. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
  11. பெருங்காயம் சிறுதுண்டு
  12. கடுகு சீரகம் கருவேப்பிலை
  13. தாளிக்க
  14. பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிது
  15. நெய் நாலு ஸ்பூன்
  16. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    இரண்டு அரிசியையும் ஒன்றாக சேர்த்து நான்கு முறை கழுவி ஊற வைக்கவும் உளுந்தை ஒருமுறை மட்டும் கழுவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும்

  2. 2

    இப்பொழுது அரிசி உளுந்து இவற்றைத் தனித்தனியே கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைத்து பிறகு நெய் தடவிய மினி இட்லி தட்டில் ஊற்றி இட்லியை எடுத்து ஒரு கப்பில் வைக்கவும்.

  3. 3

    பாசிப்பருப்பு துவரம் பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து மஞ்சள் பொடி பெருங்காயம் ஒரு உருளைக்கிழங்கு சேர்த்து 2 விசில் விடவும் வேறொரு கடாயில் கடுகு சீரகம் கருவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி பிறகு சாம்பார் பொடி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கை பிசைந்து விட்டு பருப்பை நன்கு கடைந்து குழம்புடன் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.

  4. 4

    பிறகு சாம்பாரை இறக்கி நெய் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து தேவைக்கேற்ப இட்லிகளை எடுத்து அதன் மீது சாம்பார் முழுகும் அளவிற்கு சூடாக பரிமாறி சாப்பிடவும்.மிதமான சூட்டில் சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும். இப்பொழுது சுவையான மினிக்கி சாம்பார் இட்லி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aalayamani B
Aalayamani B @cook_19909202
அன்று

Similar Recipes