கருப்பு கொண்டைக்கடலை காரக்குழம்பு- செய்முறை1

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

நான் கொண்டைக்கடலை உபயோகித்து இரண்டு விதமாக காரக்குழம்பு வைப்பேன் .இது என் மாமியார் சொல்லிக்கொடுத்த செய்முறை. இதே முறையில் வெறும் கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் மட்டும் சேர்த்து காரக் குழம்பு வைக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்கருப்பு கொண்ட கடலை
  2. 1/4டீஸ்பூன் கடுகு
  3. 1/4டீஸ்பூன் வெந்தயம்
  4. கருவேப்பிலை
  5. 1 காய்ந்த மிளகாய்
  6. 8சின்ன வெங்காயம்
  7. 4பல் பூண்டு
  8. 1தக்காளி
  9. 2 கத்திரிக்காய்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  13. 1/2 எலுமிச்சை அளவு புளி கரைசல்
  14. 1/2 கப் தேங்காய் விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து,குக்கரில் 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை &காய்ந்த மிளகாய் தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு &தக்காளி சேர்த்து வதக்கிய பின், அறிந்த கத்திரிக்காயை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  3. 3

    தேவைக்கேற்ப உப்பு,சாம்பார் பொடி& மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  4. 4

    கத்திரிக்காய் வெந்தவுடன்,வேக வைத்த கொண்டக்கடலையை அதனுடன் சேர்த்து,புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு,பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான கொண்டைக்கடலை கார குழம்பு ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes