அரபு நாட்டு சிக்கன் மந்தி

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

#wd
இந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ பாஸ்மதி அரிசி
  2. 1 கிலோ சிக்கன்
  3. 2 காய்ந்த எலுமிச்சை
  4. சீரகம் 1 /2 டேபிள் ஸ்பூன்
  5. மிளகு 1 /2டேபிள் ஸ்பூன்
  6. 2பட்டை 4கிராம்பு 4ஏலக்காய் 1 காய்ந்த எலுமிச்சை
  7. எண்ணெய்
  8. தண்ணீர்
  9. உப்பு
  10. வெண்ணெய்
  11. அரைத்த 1தக்காளி விழுது
  12. 1 வெங்காயம்
  13. 4 பச்சை மிளகாய்
  14. 1 சிக்கன் ஸ்டாக்
  15. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் சிக்கன் மசாலா தூள் சேர்த்து ஊற வைக்க அதற்கு மசாலா ரெடி செய்ய மிளகு சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் எலுமிச்சை சேர்த்து நன்கு வறுக்கவும் பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    1 டேபிள் ஸ்பூன் பட்டர் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலா தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    சிக்கன் மேல மசாலா தூள் சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் வெண்ணெய் சேர்த்து கொள்ளவும் பிறகு வெங்காயம் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்

  5. 5

    வெங்காயம் வதக்கிய பின்னர் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் ஸ்டாக் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  6. 6

    பிறகு ஊற வைத்த சிக்கன் இதில் சேர்க்கவும்

  7. 7

    பிறகு அரைத்த தக்காளியை அதில் சேர்க்கவும்

  8. 8

    1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் வீதம் தண்ணீர் சேர்க்கவும்.

  9. 9

    அதை மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். பிறகு சிக்கன் பெரட்டி விட்டு ஒரு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  10. 10

    2 பக்கம் வெந்ததும் சிக்கனை ஒரு தட்டுக்கு மாற்றவும்

  11. 11

    1கப் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விடனும் பிறகு அரிசி சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்

  12. 12

    நன்றாக வெந்த பிறகு தம் வைக்கவும். ஒரு தோசை கல் மேல் வைத்து நன்றாக சூடாக்கி அதில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்

  13. 13

    வேக வைத்து எடுத்து வைத்துள்ள சிக்கன் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.

  14. 14

    பிறகு சிக்கன் எல்லாத்தையும் எடுத்து தம் வைத்து மந்தி மேல் சேர்க்கவும் பிறகு. ஒரு அடுப்பு கரி துண்டு எடுத்து நன்கு அடுப்பில் வைத்து சூடானதும். அதை மந்தி மேல் வைக்கவும்

  15. 15

    பிறகு அதை மூடி வைக்கவும். ஒரு 5 நிமிடம்

  16. 16

    சுவையான அரபு நாட்டு சிக்கன் மந்தி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes