எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 பவுல் இட்லி மாவு
  2. 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
  3. 1/2 கப் துருவிய கேரட்
  4. 1/2 கப் துருவிய பீட்ரூட்
  5. 1/2 கப் பச்சை பட்டாணி
  6. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1டீஸ்பூன்கரம் மசாலா
  9. 1/4டீஸ்பூன் சீரகத்தூள்
  10. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1டீஸ்பூன் தனியாத்தூள்
  12. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவைக்கேற்ப உப்பு
  14. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    துருவிய கேரட் & பீட்ரூட்,பொடியாக அரிந்த வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய்,வேக வைத்த உருளைக்கிழங்கு,சிறிது பச்சை பட்டாணி என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும்,பொடியாக அறிந்த வெங்காயம் பொன்னிறமாக வதக்கி,பின் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,துருவிய காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள்,கரம் மசாலாத்தூள்,மிளகாய்த்தூள்,சீரகத்தூள் என அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி பாதி மாவு ஊற்றி பின்பு அதன் மேல் சிறு சிறு வெஜ் கட்லெட் வைத்து மீண்டும் அரை கரண்டி மாவு ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சுவையான சத்தான கட்லெட் இட்லி தயார்.

  4. 4

    கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes