மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்

Padmavathi
Padmavathi @cook_25055108
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
நான்கு பேர்கள்
  1. மீதமான சாதம் 2 கப்
  2. உருளைக்கிழங்கு ஒரு கப்
  3. பெரிய வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 5
  5. கொத்தமல்லி சிறிதளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. மல்லித் தூள் ஒரு டீஸ்பூன்
  9. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  10. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  11. கடலை மாவு 2 டீஸ்பூன்
  12. எலுமிச்சைச் சாறு 3 ஸ்பூன்
  13. ரஸ்க் தூள் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    மசித்த 2 கப் சாதத்துடன் ஒரு கப் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து அதில் 2 பெரிய வெங்காயம் 5 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் சீரகத் தூள் இவற்றை சேர்த்துக் கொள்ளவும். பிறகு 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளவும

  3. 3

    பிறகு அதை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  4. 4

    உருண்டைகளை ரஸ்க் தூளில் புரட்டி உள்ளங்கையில் வைத்து அமுக்கிக் கொண்டு ஓரங்களை லேசாக அமுக்கிக்கொள்ளவும்.

  5. 5

    பிறகு அதை மிதமான தீயில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    இப்பொழுது நமக்கு சுவையான கட்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Padmavathi
Padmavathi @cook_25055108
அன்று

Similar Recipes