கோதுமை மாவு தோசை

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#Lock down#
இதில் என்ன வித்தியாசம் என்றால் கோதுமை மாவை கைவிட்டு கரைத்தால் சிறிய கட்டி வரும். அதைக் கரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வீட்டில் இருப்பதால் டென்ஷன் ஆகாமல் கூலாக வேலை செய்வதற்காக அதை நான் மிக்ஸியில் போட்டு அரைத்து விட்டேன். மிகவும் சுலபமாக மாவு கரைத்து விடலாம். டென்ஷன் இல்லாமல் மாவை சுலபமாக கரைக்கலாம். நன்றி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு 1ஆழாக்கு
  2. சோளமாவு 1 குழிக்கரண்டி
  3. அரிசி மாவு 1 குழிக்கரண்டி
  4. வெங்காயம்-1
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. தாளிக்க
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  9. கடலைப் பருப்பு 1 ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் 2
  11. கறிவேப்பிலை 1 கொத்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு,அரிசி மாவு சோளமாவு, உப்பு, தண்ணீர் ஊற்ற மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டால் கட்டி வராமல் கரைத்து விடலாம்.

  2. 2

    மிக்ஸி யில் இருந்து பாத்திரத்திற்கு மாற்றவும். பின் வட சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். வதக்கி அதை மாவில் கொட்டவும்.

  3. 3

    மாவு தண்ணீராக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் தோசை மொறுமொறுவென்று வரும். எப்பொழுதும் போல தோசை ஊற்றக்கூடாது. ஓரத்திலிருந்து சுற்றி ஊற்றவும். தானே நடுவில் வந்து விடும். திருப்பிப் போடத் தேவையில்லை மூடி வைத்து வேக வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes