நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லி விருந்து

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

#lockdown
#book
நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது.குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
#நெல்லி வெல்லகேண்டி
#நெல்லி சுகர் கேண்டி
#நெல்லி வத்தல்
#நெல்லி கசாயம்
#நெல்லி ஜூஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
1 மணி நேரம்
  1. நெல்லி சுகர் கேண்டி::::
  2. 15 நெல்லிக்காய்
  3. 1/2 கப் சக்கரை
  4. நெல்லி வெல்ல கேண்டி:::
  5. 15 நெல்லிக்காய்
  6. 1 கப் வெல்லம்
  7. 2டீஸ்பூன் பணங்கற்கண்டு
  8. நெல்லி வத்தல்:::::
  9. 20 நெல்லிக்காய்
  10. நெல்லி ஜூஸ்::::::
  11. 4 நெல்லிக்காய்
  12. 1டீஸ்பூன் மிளகு தூள்
  13. 1/2டீஸ்பூன் உப்பு
  14. 3 கப் தண்ணீர்
  15. நெல்லிக்காய் கசாயம்:::
  16. 1/2 கப் வெல்லம்
  17. 1 கப் நெல்லிக்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    நெல்லி சுகர் கேண்டி::::::::::::::முதலில் 15 நெல்லிக்காயை சுத்தமாக கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.பின்னர் கொட்டைகளை நீக்கி நெல்லிக்காயை நறுக்கி கொள்ளவும்

  2. 2

    பின்னர் இதில் தண்ணீர் சேர்க்காமல் 1/2 கப் சக்கரை சேர்த்து 2-3 நாள்கள் ஊற விடவும்.

  3. 3

    நன்றாக ஊறிய பின்னர் இதனை வெயிலில் 2-3 நாட்கள் வைக்க வேண்டும். மிக்ஸியில் சக்கரையை நன்றாக அரைத்து கொள்ளவும்.இதனை காய்ந்த நெல்லிக்காய் மேல் தூவி கலந்தால் சுவையான நெல்லி சுகர் கேண்டி தயார்

  4. 4

    நெல்லி வெல்ல கேண்டி:::::::::முதலில் 15 நெல்லிக்காயை சுத்தமாக கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.பின்னர் கொட்டைகளை நீக்கி நெல்லிக்காயை நறுக்கி கொள்ளவும்.வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்

  5. 5

    இதில் நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்து ஊற விடவும்.முதல் நாள் ஊறியதும் மறுநாள் நெல்லிக்காயை மட்டும் எடுத்து காலை வெயிலில் வைத்து காய விடவும்.பின்னர் இரவில் மீண்டும் காய்ந்த நெல்லிக்காயை எடுத்து வெல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.

  6. 6

    இதனை 3 நாட்கள் இப்படி செய்ய வேண்டும்.ஊற வைக்கவும் பின்னர் காலையில் காய வைக்கவும்.4 நாளில் மிக்ஸியில் பணங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை காய்ந்த நெல்லிக்காயில் சேர்த்து கிளறவும்.சுவையான நெல்லி வெல்ல கேண்டி தயார்.

  7. 7

    நெல்லி வத்தல்::::::::::நெல்லிக்காய் நன்றாக அறுத்து கொட்டைகளை நீக்கி வைக்கவும்.பின்னர் இதனை வெயிலில் நன்றாக காயும் வரை வைக்க வேண்டும்.வத்தல் பதம் வந்ததும் எடுக்கவும்.இதனை நேரடியாகவோ அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து மோருடன் குடிக்கலாம்.

  8. 8

    சுவையான நெல்லிக்காய் வத்தல் தயார்.

  9. 9

    நெல்லிக்காய் ஜூஸ்:::::::::நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் சேர்க்கவும். இதனுடன் சிறிது மிளகு தூள்,உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். சுவையான நெல்லிக்காய் ஜூஸ் தயார்.

  10. 10

    நெல்லிக்காய் கசாயம்:::::வெல்லத்தினை நன்றாக காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.நெல்லிக்காய் மிக்ஸியில் நன்றாக அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.

  11. 11

    கடாயில் நெல்லிக்காய் சாறு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். சிறிது கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான நெல்லி கசாயம் தயார்

  12. 12

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிவிருந்து தயார். நெல்லிக்காய் கசாயம்,நெல்லிக்காய் சுகர் கேண்டி, நெல்லிக்காய் வெல்ல கேண்டி, நெல்லிக்காய் வத்தல் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes