ஆரோக்யமான அடை தோசை

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#book
#lockdown
இப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடம்
4 நபர்
  1. 1 கப் புழுங்கலரிசி (சாப்பாடு அரிசி),
  2. 3/4 கப் கடலைப்பருப்பு,
  3. 1/2 கப் துவரம்பருப்பு,
  4. 1/2 கப் உளுந்தம்பருப்பு,
  5. 1/4 கப் பாசிப்பருப்பு,
  6. 4டீஸ்பூன் பச்சரிசி,
  7. 2-4 காய்ந்த மிளகாய்,
  8. 1/4டீஸ்பூன் பெருங்காயம்,
  9. 1 பெரிய வெங்காயம்,
  10. கருவேப்பிலை இலைகள்,
  11. தேவையானஅளவு உப்பு, தண்ணீர், எண்ணெய்

சமையல் குறிப்புகள்

3 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு எல்லாவற்றையும் 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

  2. 2

    அதோடு 1 பெரிய வெங்காயம், கருவேப்பிலை இலைகள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    தோசை கல் சூடானதும் மாவை ஊற்றி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் மேலே ஊற்றலாம், இரண்டு பக்கமும் தோசை வெந்ததும் பரிமாறலாம். ஆரோக்கியமான அடை தோசை தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes