கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#nutrient1

வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4  நபர்கள்
  1. வெள்ளை கொண்டைக்கடலை - 150கிராம்
  2. பெரிய வெங்காயம்- 2
  3. தக்காளி- 2
  4. பச்சை மிளகாய் -5
  5. கருவேப்பிலை -1கொத்து
  6. மிளகாய்தூள் -1டேபிள்ஸ்பூன்
  7. மல்லித் தூள் -2 டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
  9. அரைக்க
  10. சோம்பு -1 டேபிள் ஸ்பூன்
  11. தேங்காய்-1
  12. பட்டை -1துண்டு
  13. கிராம்பு-1
  14. பொட்டுக்கடலை -1ஸ்பூன்
  15. முந்திரி பருப்பு -6
  16. உப்பு- தேவையான அளவு
  17. எண்ணெய்- தேவையான அளவு
  18. தாளிக்க
  19. பட்டை-1
  20. பூ-1
  21. பிரிஞ்சி இலை-1
  22. ஸ்டார் பூ-1
  23. சோம்பு-1\4 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கொண்டைக்கடலையை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் சிறிது உப்பு போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்

  3. 3

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தக்காளியையும் நைஸாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவி அதனுடன் அரைக்க கொடுத்துள்ள வற்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, இலை, ஸ்டார் பூ, சோம்பு இவற்றை சேர்த்து நன்கு வெடிக்க விடவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெள்ளையாக வதங்கும் வரை வதக்கவும்.

  5. 5

    பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்

  6. 6

    இப்போது வேக வைத்த கொண்டைக் கடலையை அந்த தண்ணீரோடு சேர்த்து வதங்கிய உடன் சேர்க்கவும். இப்போது மிளகாய்த்தூள், மல்லி சேர்க்கவும்

  7. 7

    பிறகு மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்

  8. 8

    இப்போது ஒரு கப் தண்ணீர் சேர்த்து எல்லாம் சேர்ந்து கொதி வந்ததும் மூடி ஒரு விசில் விட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும். கொண்டைக்கடலை குருமா மிகவும் டேஸ்ட்டாக இருக்கும் சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை, நாண் எல்லாத்துக்கும் ஏற்ற சைட் டிஷ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes