எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. 2உருளைக்கிழங்கு
  2. 2தக்காளி
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 1பட்டை,
  6. 1கிராம்பு,
  7. 1 டீஸ்பூன் சோம்பு
  8. 6உடைத்த முந்திரி
  9. 1துண்டு இஞ்சி,
  10. 5பல் பூண்டு
  11. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  13. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  14. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  15. 1டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  16. உப்பு
  17. 2டீஸ்பூன் பொட்டுக்கடலை
  18. தாளிக்க
  19. 3டீஸ்பூன் ஆயில்
  20. 1டீஸ்பூன் கடுகு
  21. 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  22. 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  23. சிறிதுகறிவேப்பிலை
  24. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    உருளைக்கிழங்கு கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேகவிடவும்.தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும்.தக்காளி 2 தண்ணீரில் கொதிக்க விட்டு தோல் நீக்கி வைக்கவும்.

  2. 2

    பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும்.இஞ்சி 1 துண்டு பூண்டு 5 பல்,சோம்பு 1 டீஸ்பூன்,உடைத்த முந்திரி 6,பட்டை 1,கிராம்பு 1,தனியா தூள் 1 1/2 டீஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்,கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.

  3. 3

    வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்,முந்திரி,இஞ்சி பூண்டு,சோம்பு,பட்டை, கிராம்பு பொட்டுக்கடலை,தனியாதூள்,கரம் மசாலாதூள்,சீரகத்தூள் மிளகாய் தூள் சேர்த்து வைக்கவும்.

  4. 4

    அதை நைசாக அரைத்து வைக்கவும்.தக்காளி தோல் நீக்கி ஜூஸ் ஆக அரைத்து வைக்கவும்.

  5. 5

    கடாயில் ஆயில் 3 டீஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் கடலை பருப்பு 1 டீஸ்பூன் பொன்னிறமாக தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு அரைத்த தக்காளி ஜூஸ் சேர்க்கவும்.கொதிக்க விடவும்.

  6. 6

    அரைத்த விழுதை சேர்க்கவும். கலக்கி கொதிக்க விட்டு பச்சை வாசனை நீங்கியவுடன் வெந்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

  7. 7

    கொதிக்க விடவும்.சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி. சப்பாத்தி பூரிக்கு ஏற்றது. நறுக்கிய வெங்காயம் மிளகு தூள் உப்பு சேர்த்து கலக்கி குருமாவுடன் பரிமாறவும். 😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes