தேவையான பொருட்கள்

  1. 2 கப் கேபேஜ் பொடியாக அரிந்தது
  2. 1 பச்சை மிளகாய்
  3. 1 வெங்காயம் நறுக்கியது
  4. 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  5. 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  6. 2 மேசைக்கரண்டி கார்ன் ஃப்ளார்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு எண்ணெய்
  9. 4 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  10. 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  11. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  12. 1 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  13. 1 தேக்கரண்டி மிளகுப் பொடி
  14. 2 மேசைக்கரண்டி கார்ன் ஃப்ளார்
  15. தேவையானஅளவு உப்பு
  16. 2 மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நறுக்கிய கேபேஜ், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கார்ன் ஃப்ளார், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  2. 2

    கலந்த கலவையானது உருண்டைகளாக உருட்டும் அளவு இருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    கடாயில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி பின் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  5. 5

    கார்ன் ஃப்ளாரை இரண்டு மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கலந்து பொரித்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    நன்கு கலந்து வந்ததும் இறக்கி நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

  7. 7

    வைட்டமின்கள் அடங்கிய கேபேஜ் மஞ்சூரியனைக் குடும்பத்தினருக்குப் பரிமாறி மகிழவும் ‌

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes