எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2பேர்
  1. 4சிறிய உருளைக்கிழங்கு நீளமாக சீவியது
  2. 2பச்சை மிளகாய்
  3. 1துண்டு இஞ்சி திருவியது (பூண்டும் சேர்க்கலாம்)
  4. 2டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  5. 2டேபிள் ஸ்பூன் சோளமாவு
  6. 1டீஸ்பூன் உப்பு
  7. சிறிதுகொத்தமல்லி
  8. பொறிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை நீளமாக சீவி உப்பு தண்ணீரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு பேசினில் உருளைக்கிழங்குகளை நன்கு பிழிந்து போட்டுக்கொள்ளவும்.

  3. 3

    அதில் மைதா மாவு, சோளமாவு, உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய இஞ்சி சேர்த்து பிசறி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    இது மொறு மொறுப்பாக இருக்கும். வெங்காய பக்கோடா போன்று சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes