ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2-3 பரிமாறுவது
  1. 2 கப் தோசை மாவு
  2. 3முட்டை
  3. எண்ணெய்
  4. மிளகாய் சட்னி
  5. 15 பூண்டு பல்
  6. 4-5 வர மிளகாய்
  7. 4சின்ன வெங்காயம்
  8. உப்பு
  9. 2 டேபிள்ஸ்பூன் நலலெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும் பிறகு கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்க்கவும்

  2. 2

    மிதமான தீயில் அரைத்த விழுதை எண்ணெயுடன் கலக்கும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும் பொது தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.. எண்ணெய் பிரிந்து பச்சை வாசனை போன பிறகு எடுக்கவும் மிளகாய் சட்னி தயார்

  3. 3

    தோசை சட்டியை சூடு செய்து தோசை சட்டி சூடானதும் தோசை வார்க்கவும் சுற்றிலும் எண்ணெய் விட்டு முட்டை, மிளகாய் சட்னியும் வைத்து எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்க்கவும்... தோசை சற்று முறுகல் ஆகி வரும் போது திருப்பிப் போட்டு 30 வினாடிகள் வைத்து எடுத்து பரிமாறவும் (விருப்பப்பட்டால் நறுக்கிய வெங்காயம் மேலே தூவிக் கொள்ளவும்)

  4. 4

    இந்த தோசையை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி,சாம்பாருடன் பரிமாறலாம் இல்லை எனில் வெறுமனே சாப்பிடலாம் மிகவும் சுவையாகவும் காரசாரமாகவும் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes