தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கை பிடி முருங்கைக்கீரை
  2. 1 தக்காளி
  3. 1 பச்சை மிளகாய்
  4. 10 மிளகு
  5. 4 பூண்டு
  6. சிறியதுண்டு இஞ்சி
  7. 1டீ ஸ்பூன் ஜீரகம்
  8. உப்பு
  9. கடுகு தாளிக்க
  10. 1நெல்லிக்காய் சைஸ் புளி கரைத்தது
  11. கொத்தமல்லி, கருவேப்பில்லை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முருங்கைக்கீரையை 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்

  2. 2

    ஒரு மிக்ஸில் தக்காளி, மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாய் வைத்து எண்ணெய் கடுகு போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  4. 4

    புளி கரைசல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    முருங்கைக்கீரை கொதிக்க வைத்ததை இதனுடன் சேர்த்து குறைந்த தீயில் கொதி வர விடவும்.

  6. 6

    கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  7. 7

    ஆரோக்கியமான முருங்கைக்கீரை ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes