ரவா கேக்

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#Cookwithmilk
ரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. பால் 250 மில்லி
  2. ரவை 3 ஸ்பூன்
  3. தயிர் 3 ஸ்பூன்
  4. சர்க்கரை 6 ஸ்பூன்
  5. வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு
  6. பிஸ்தா 6 துண்டுகள்
  7. டுட்டி ப்ரூட்டி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயை எடுத்து 3ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலர் மாறும் வரை கொதிக்க விடவும்.

  2. 2

    பிறகு காய்ச்சாத பால் 250 மில்லியை கடாயில் ஊற்றி கொதிக்க விடவும்.கொதித்த பிறகு அதனுடன் 3 ஸ்பூன் ரவை சேர்த்து கட்டி இல்லாமல் 3 நிமிடங்கள் கிளறி விடவும்.

  3. 3

    பிறகு சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விட்டு இறக்கவும்.

  4. 4

    பின்னர் ஒரு பௌலில் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து (தயிருக்கு மாற்றாக முட்டை சேர்த்து கொள்ளலாம்) நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு அதில் நாம் கிளறி வைத்த பால் ரவை கலவையை இதில் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு ஊற்றி கலந்து கொள்ளவும்.

  5. 5

    பின்னர் மற்றொரு கிண்ணத்தை எடுத்து அதை சுற்றிலும் நெய் தடவி அதில் சர்க்கரை கலவையை ஊற்றி,பிறகு தயிர் பால் ரவை கலவையே சேர்க்க வேண்டும்.

  6. 6

    சேர்த்த பின்னர் இட்லி பாத்திரத்தத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் அதில் ஒரு ஸ்டாண்டு வைத்து நாம் சேர்த்த கலவை கிண்ணத்தை உள்ளே வைத்து 25 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்

  7. 7

    25 நிமிடங்கள் கழித்து எடுத்து கத்தியின் உதவியுடன் சுற்றிலும் எடுத்து விட்டு,தட்டில் தலை கீழாக கவிழ்த்தி, அதன் மேலே நறுக்கிய பிஸ்தா துண்டுகளையும்,டுட்டி ப்ரூட்டியையும் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

  8. 8

    சுவையான ரவா கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes