ராகி குலுக்கு ரொட்டி (Raagi kulukku rotti recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#flour1 #Kids1
கேழ்வரகு மாவில் செய்யப்படும் இந்த குலுக்கு ரொட்டி ஒரு இனிப்பு பண்டம். இது காலை உணவாகவும் மாலை சிற்றுண்டியாகவும் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்தலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
நான்கு பேர்
  1. இரண்டு கப்கேழ்வரகு மாவு
  2. ஒரு கப்துருவிய வெல்லம்
  3. ஒரு கப்வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை
  4. நெய்யில் வறுத்த முந்திரி - 15
  5. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  6. உப்பு - இரண்டு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சற்று தளர்வாக நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடேற்றி சிறு வட்ட வடிவில் ரொட்டிகளாக தட்டி சுற்றி நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    ரொட்டிகளை ஆற விட்டு சிறு சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.

  3. 3

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து கால் டம்ளர் நீர் விட்டு, ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு துண்டுகளாக்கிய ரொட்டிகளை வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறவும்.

  4. 4

    வேர்க்கடலையையும் முந்திரி பருப்பையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வெல்ல ரொட்டி கலவையில் தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes