மேகி நூடுல்ஸ் குலாப்ஜாமூன்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  1. 1பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. 4 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  3. 2டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  4. 2டேபிள்ஸ்பூன் நெய்
  5. 2 ஏலக்காய்
  6. 1கப் சர்க்கரை
  7. 3/4கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். முதலில் நூடுல்ஸை தனியாக ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பவுலில் அரைத்த மேகி நூடுல்ஸ் பவுடரை சேர்த்து, பின்னர் பால் பவுடர், மைதா மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். காயாமல் இருக்க சிறிது நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகு எடுக்கவும். ஏலக்காய் தட்டி சேர்க்கவும். பின் இதில் உருண்டைகளை சேர்த்து கலந்து விடவும். 1/2மணிநேரம் கழித்து, நன்கு ஊறியதும் பரிமாறவும்.

  6. 6

    சுவையான மேகி நூடுல்ஸ் குலாப்ஜாமூன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes