தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 நபர்கள்
  1. 150 கிராம் எலும்பில்லாத மட்டன்
  2. 6 பல் பூண்டு
  3. 6 வரமிளகாய்
  4. 1.5 டீஸ்பூன் சீரகம்
  5. 1/4 முடி தேங்காய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய்
  8. தேவையானஅளவு தண்ணீர்
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மட்டனை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், வரமிளகாய், பூண்டு மற்றும் தேங்காயை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அரைத்த கலவையை மட்டனில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதையும் மட்டனில் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

  3. 3

    அதன் பிறகு ஒரு குக்கரில் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள மட்டன் கலவையை எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

  4. 4

    மட்டன் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 7 விசில் வரை வைத்துக்கொள்ள வேண்டும்.

  5. 5

    பிறகு குக்கரை திறந்து நன்கு கலந்து விட்டு கிரேவி பதத்திற்கு வரும்வரை சுண்ட வைக்க வேண்டும்.

  6. 6

    வெறும் நான்கு முக்கியப் பொருள்கள் வைத்து சமைத்த இந்த சீரக மட்டன் கிரேவி சாதம், தோசை மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes