எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 500 கிராம் ஆட்டுக்கறி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. ஒரு பெரிய தக்காளி
  4. 1 ஸ்பூன் சோம்பு
  5. சிறியதுண்டு பட்டை
  6. மூன்று கிராம்பு
  7. சிறிதளவுகல்பாசி பூ
  8. 1பிரியாணி இலை
  9. 1 அன்னாசிப் பூ
  10. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. ஒரு ஸ்பூன் சீரக தூள்
  13. அரை ஸ்பூன் மிளகுத் தூள்
  14. மசாலா அரைக்க
  15. ஒரு ஸ்பூன் சோம்பு
  16. 11/2 ஸ்பூன் மல்லி
  17. 2 காய்ந்த மிளகாய்
  18. ஒரு ஸ்பூன் சீரகம்
  19. அரை ஸ்பூன் மிளகு
  20. சிறிதளவுபட்டை
  21. ஒரு ஏலக்காய்
  22. இரண்டு கிராம்பு
  23. ஒரு ஸ்பூன் கசகசா
  24. இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல்
  25. ஒரு பெரிய வெங்காயம்
  26. 2 குழி கரண்டி நல்லெண்ணெய்
  27. இரண்டு கொத்து கருவேப்பிலை
  28. தேவையானஅளவு உப்பு
  29. தேவையானஅளவு தண்ணீர்
  30. ஒரு முழு பூண்டு
  31. சிறிதளவுஇஞ்சி

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு சீரகம் மிளகு மிளகாய் மல்லி கசகசா பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் கருவேப்பிலை சிறிதளவு போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வறுத்து தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்

  2. 2

    வறுத்த மசாலா கலவையை ஆறவிட்டு பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்

  3. 3

    ஆட்டுக் கறியை நன்கு கழுவி பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் வெங்காயம் தக்காளி வதக்கி வைக்கவும் மசாலா பொருட்களை எடுத்து வைக்கவும்

  4. 4

    இஞ்சி பூண்டு சம அளவு எடுத்து இரண்டையும் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்

  5. 5

    குக்கரில் 2 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரியாணி இலை கருவேப்பிலை தாளித்து பின் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  6. 6

    இஞ்சி பூண்டு விழுது ரெண்டு ஸ்பூன் சேர்த்து வதக்கவும்

  7. 7

    பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்

  8. 8

    தக்காளி வதங்கியதும் ஆட்டுக்கறியை சேர்த்து எண்ணெயில் சுருள சுருள கிண்டவும் மஞ்சள் தூளை சேர்க்கவும்

  9. 9

    மிளகுத்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்

  10. 10

    தேவையான அளவு உப்பு சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்

  11. 11

    விசில் அடங்கியதும் வறுத்த மசாலா கலவையை ஊற்றி 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும் குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes