எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
ஆறு  பேர்
  1. 500 கிராம் கோதுமை மாவு
  2. ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. ஒரு டீஸ்பூன் சீரகம்
  5. அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி
  6. கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு
  8. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பெரிய பேஸினில் கோதுமை மாவை போட்டுக்கொண்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணை எல்லாவற்றையும் நன்கு கலந்து வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  4. 4

    ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து ஒரு பாதி பிளாஸ்டிக் ஷீட்டில் மூடி ஒரு கப்பை வைத்து அழுத்தி வட்டமாக செய்து கொள்ளவும்.

  5. 5

    சப்பாத்தி போலமெலிசாக தேய்த்து சிறிய மூடிக்கொண்டு வட்டமாகவும் செய்யலாம். அதில் முள் கரண்டியால் குத்தி விடவும். அப்பொழுதுதான் உப்பாமல் தட்டையாக வரும்.

  6. 6

    அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் வைத்து இந்த தட்டைகளை பொரித்து எடுக்கவும்.

  7. 7

    அருமையான தட்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes