நெய் இட்லி சாம்பார்.

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#combo-1..இட்லியுடன் தொட்டு சாப்பிட சாம்பார் தான் சரியான காம்பினேஷன்.. பல விதமாக செய்வார்கள்.. நான் என்னுடைய செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 1/2 கப் பயத்தம்பருப்பு
  3. 2பொடியாக நறுக்கின தக்காளி
  4. 1கப் சின்ன வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. ஒரு துண்டு பரங்கிகாய்
  7. காரத்துக்கேற்ப சாம்பார் பவுடர்
  8. 2ஸ்பூன் நெய்
  9. கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்ச கொத்தமல்லி
  10. உப்பு, பெரும்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு, பயத்தம்ப்பருப்பு, பரங்கிக்காய், தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், பெரும்காயம் சேர்த்து நன்கு குழைய வேக விட்டு எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், அத்துடன் உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணி விட்டு கொதிக்க விடவும்

  3. 3

    அத்துடன் வேக வைத்து வெச்சிருக்கும் பருப்பை சேர்த்து, தேவையான தண்ணி சேர்த்து ஒரு கொதி வரும்போது மல்லி தழை சேர்த்து ஸ்டவ்வில் இருந்து கீழே இறக்கி, மேலே 1 ஸ்பூன் நெய் விட்டுக்கவும்.. சுவையான சாம்பார் தயார்... எளிமையான முறையில் 20 நிமிடத்தில் செய்ய கூடிய சுவை மிக்க சாம்பரை இட்லியுடன் சேர்த்து சாப்பிடவும்

  4. 4

    நெய் சாம்பார் இட்லியை மினி இட்லியின் மேல் பரவலாக விட்டு சாம்பார் இட்லியாகவும் சாப்பிடலாம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes