சீரக சாம்பார்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#everyday2
என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1கப் துவரம் பருப்பு
  2. 1ஸ்பூன் சீரகம்
  3. 1 கப் தோலுரித்த சிறிய வெங்காயம்
  4. 3 ஸ்பூன் சாம்பார் தூள்
  5. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1நெல்லிக்காய் அளவு புளி
  7. 2ஸ்பூன் எண்ணெய்
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  10. 4வர மிளகாய்
  11. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. 1ஸ்பூன் நெய்
  13. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
  14. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிறிய வெங்காயம் ஒரு கப் அளவிற்கு எடுத்து தோல் உரித்து இரண்டாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.தாளிக்க வேண்டிய பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் சீரகம் எடுத்துக்கொள்ளவும்.பருப்பில் மஞ்சள் தூள், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். புளி சிறிதளவு ஊறவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் மற்றும் சீரகம் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்க்கவும்.உடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.அரை டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து அதனுடன் சாம்பார் தூள் உப்பு சேர்த்து வெங்காயத்தை வேக வைக்கவும். வெங்காயம் வெந்த உடன் பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    வெங்காயம் பருப்பில் சேர்த்து நன்கு வெந்தவுடன் அதில் புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சாம்பாரில் சேர்த்து கொள்ளவும்.இப்போது சுவையான சீரக வெங்காய சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes