பொடி போட்ட கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல்

Swarna Latha
Swarna Latha @latha
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. கத்தரிக்காய் 1/4 கிலோ
  2. முருங்கைக்காய் 1
  3. வரமிளகாய் 5
  4. மல்லி 1 ஸ்பூன்
  5. அரிசி 1 ஸ்பூன்
  6. மிளகு 1/2 ஸ்பூன்
  7. பூண்டு 10 பல்
  8. மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு
  9. எண்ணெய் 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் மிளகாய், மல்லி, அரிசி, மிளகை எண்ணெய் ஊற்றாமல் வறுத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்

  5. 5

    வெங்காயத்துடன் வெட்டி வைத்த கத்தரிக்காய், முருங்கைக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, மூடி வைத்து வேக விடவும்.

  6. 6

    காய் வெந்தவுடன் பொடித்து வைத்த பொடியை போட்டு நன்கு கலந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். சுவையான பொடி போட்ட கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல் ரெடி. தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு செமையான ஜோடி...😀😀

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes