கல்யாண வீட்டு நெய் சோறு

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#combo5
பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 3 டம்பளர் பாஸ்மதி அரிசி
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1/4 கப் நெய்
  4. 1பிரியாணி இலை
  5. 3துண்டு பட்டை
  6. 5 ஏலக்காய்
  7. 8கிராம்பு
  8. 2மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 1தக்காளி
  10. 1மேசைக் கரண்டி முந்திரி
  11. 5பச்சை மிளகாய்
  12. 4.5 கப் தண்ணீர்
  13. 1.5மேசைக்கரண்டி உப்பு
  14. 1/4 கப் புதினா இலைகள்
  15. 1/4 கப்மல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாஸ்மதி அரிசியை 2 தண்ணீரில் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    தக்காளி குலையாமல் வதக்க வேண்டும். வதங்கிய பின் மல்லி இலை கள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து குக்கரில் சேர்க்கவும். இறுதியில் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி விடவும். விசில் போடும் இடத்தில் ஆவி வந்தபின் விசிலை போட்டு சிறு தீயில் 7 நிமிடம் வேகவைக்கவும் பிறகு அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    குக்கர் ஆறியதும் திறந்து பார்த்தால் உதிரி உதிரியாக கல்யாணவீட்டு பாஸ்மதி அரிசி நெய் சோறு தயார். இதனை கறிக்குழம்பு டன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes