நுங்கு பாயாசம்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#combo5
எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 8நுங்கு
  3. 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 1 ஸ்பூன் ஏலத்தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பாலை அடி கணமான வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும் நன்கு 25 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் ஓரங்களில் படியும் ஆடையை தனியாக எடுத்து வைக்கவும் இவ்வாறு பால் திக்காக வந்ததும் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறி கொதிக்க விடவும் ஒரு லிட்டர் பால் சுமார் 200 மில்லி அளவிற்கு வந்ததும் எடுத்து வைத்த ஆடையை மலாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இதனுடன் சேர்த்து நன்கு கலந்து ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்

  2. 2

    பின் நன்றாக ஆறிய பிறகு நுங்கை தோல் உரித்து சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் பின் அதை நன்றாக ஆறவிட்ட பாலுடன் கலந்து கொள்ளவும் பின் இதை ஒரு இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர விடவும் பின் ஜில்லென்று பரிமாறவும்

  3. 3

    பாலை எந்த அளவிற்கு குருக்கறோமோ (சுண்ட விடுவது) அந்த அளவிற்கு நன்றாக இருக்கும் பால் சுண்ட சுண்ட நல்ல ருசி இருக்கும் கூட மலாய் சேர்த்து நுங்கு சேர்த்து க்ரீமியா சூப்பரா இருக்கும்

  4. 4

    இதே போல நுங்கிற்கு பதிலாக இளநீர் வழுக்கை கொண்டு செய்யலாம் பால் ஆறிய பிறகு நுங்கை சேர்க்க வேண்டும் நுங்குடன் சேர்ந்து பருகும் போது அருமையாக இருக்கும் விரும்பினால் நட்ஸ் சேர்த்து கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes