கிருஷ்ணகிரி ஸ்பெஷல் ராகி குலுக்கடை

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vattaram #week8 , ராகி குலுக்கடை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க உணவாகும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் ராகி மாவு
  2. 1.5 கப் வெல்லம்
  3. 1.5 கப் வேர்க்கடலை
  4. 1/2 கப் கருப்பு எள்ளு
  5. 1 மேஜை கரண்டி சுக்குத் தூள்
  6. 4ஏலக்காய்
  7. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கேன் வைத்து வெல்லத்தை அதனுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகு எடுக்க வேண்டும்

  2. 2

    அந்தப் பாகை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு பேன் வைத்து வேர்க்கடலையை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பின் வேர்க்கடலையை தோல் நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும், அதே பேனில் எள்ளு, ஏலக்காய் சுக்கு தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், பின் வதக்கிய கடலையும் எல்லையும் தனித்தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்

  4. 4

    பின் ராகி மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகும் பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்

  5. 5

    பின் ஒரு தோசைக்கல் வைத்து ராகி மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து தோசைக்கல் சூடான பின் போட்டு நன்கு அடை பதத்திற்கு தட்டி கொள்ள வேண்டும், ஒரு பக்கம் வெந்ததும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  6. 6

    பின் அந்த ஆடையை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும், பின் ஒரு கனமான கடாயில் வெல்லப்பாகை சேர்த்து அதனுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்,

  7. 7

    தண்ணீர் நன்கு கொதித்ததும் வெட்டி வைத்திருக்கும் ராகி அடையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும் பின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை பவுடர் சிறிதளவு மற்றும் எள்ளு பவுடரை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்

  8. 8

    நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வேர்க்கடலை பவுடரை அதில் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும், இந்த ராகி குலுக்கடையை அன்றே சாப்பிடாமல், ஒரு மண் சட்டியில் ஒரு நாள் இரவு வரை வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes