ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 minutes
2 பரிமாறுவது
  1. 1கப் ராகி மாவு
  2. 50 கிராம்வெண்ணெய்
  3. 7பேரிச்சம் பழம்
  4. 4மேஜை கரண்டி பால்
  5. 1டீ ஸ்பூன் பேகிங் பவுடர்
  6. உப்பு சிறிது

சமையல் குறிப்புகள்

40 minutes
  1. 1

    ஒரு கிண்ணத்தில் வெண்ணையை நன்றாக அடித்துக்கொள்ளவும்

  2. 2

    பேரிச்சம்பழத்தை வெதுவெதுப்பான பாலில் சிறிது நேரம் ஊறவைக்கவும்

  3. 3

    மிக்ஸியில் பேரிச்சம்பழம் மற்றும் பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  4. 4

    அரைத்த விழுதை வெண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  5. 5

    இதனுடன் சலித்த மாவு, உப்பு, பேக்கிங் பவுடரையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  6. 6

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி கொள்ளவும்

  7. 7

    முள் கரண்டியால் மேற்புறம் டிசைன் செய்து கொள்ளவும்

  8. 8

    குக்கரில் உப்பை லேயராக பரப்பி ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்

  9. 9

    ஒரு தட்டில் சிறிது வெண்ணெய் தடவி டிசைன் செய்துள்ள குக்கீயை இடைவெளி விட்டு வைக்கவும்

  10. 10

    இதனை குக்கரில் உள்ள ஸ்டாண்ட் மீது வைத்து விசில் இல்லாமல் மூடி 25 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும

  11. 11

    பிறகு குக்கரில் இருந்து வெளியே எடுத்து ஆறியதும் பறிமாறவும்

  12. 12

    மொறுமொறுப்பான ஆரோக்கியமான குக்கீஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
அன்று
Karnataka

Similar Recipes