டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)

#3m
வெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நன்கு பழுத்த மாம்பழத்தை தோல் சீவி உள்ளே இருக்கும் பழத்தை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
- 2
ஒரு பெரிய தேங்காயை சில்லு சில்லாக உடைத்து, தோலை முழுவதுமாக சீவி வெள்ளையாக வைக்கவும்.
- 3
தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் தூளாக அரைத்து எடுத்து, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக மிதமான தீயில் 10 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும். இதுதான் உலர்த்தப்பட்ட தேங்காய் (டேசிக்கேட்டேட் கோக்கனட்)
- 4
பிறகு மிக்ஸியில் 1.5 கப் உலர்த்தப்பட்ட தேங்காய், 1 கப் சர்க்கரை மற்றும் 1 கப் பால் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
- 5
அரைத்த விழுதை ஒரு தவாவில் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறி விட்டு வேகவிடவும். 20 நிமிடங்கள் வரை நடுநடுவே நன்றாக கிளறிவிட்டு, சுருண்டு ஒட்டாமல் வரும் வரை விடவும்.
- 6
பிறகு அதனுடன் முதலில் அரைத்து வைத்த மாம்பழம் விழுதையும் சேர்க்கவும். நன்றாக கலந்துவிட்டு மேலும் 20 நிமிடங்கள் வரை நடுநடுவே கிளறி விட்டு சுருண்டு வரும் வரை வைக்கவும்.
- 7
கலவை சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன், அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிட்டு அளவான உருண்டைகளாக பிடிக்கவும். உருட்டும் பொழுது அதிலேயே எண்ணெய் போன்று வரும்.. தனியாக நெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
- 8
பிறகு உள்ளே வைக்கும் நட்ஸ் ட்விஸ்ட் செய்வதற்கு, 25 கிராம் வறுத்த தோலுரித்த வேர்க்கடலை, பாதாம், முந்திரி, 1 கப் உலர்த்தப்பட்ட தேங்காய் மற்றும் 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் சேர்த்து பொடித்த சர்க்கரை..
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக சிறிதளவு பால் சேர்த்து அரைத்தெடுக்கவும். - 9
அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். பிறகு முதலில் செய்து வைத்த மாம்பழ உருண்டையை கையில் வைத்து அழுத்தி கிண்ணம் போல் செய்து, நட்ஸ் உருண்டையை நடுவே வைத்து அப்படியே சேர்த்து ஒரே உருண்டையாக உருட்டி பிடிக்கவும்.
- 10
வெடிப்புகள் இல்லாத உருண்டைகளாக அனைத்தையும் பிடித்து வைக்கவும். சுவையான வித்தியாசமான டபுள் டக்கர் மாம்பழ நட்ஸ் லட்டு ரெடி😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ அவல் கேசரி


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)


மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)


கேரட் லட்டு(Carrot Laddu) 🥕


மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)


பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)


மேங்கோ ஸ்டாபெரி கஸ்டர்ட் (Mango strawberry custard)


மாம்பழ பாசுன்டி


மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)


மாம்பழ புதினா ஜூஸ்


மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)


மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)


மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)


மாம்பழ பிர்னி / mango phirni receip in tamil


மாம்பழ பாயசம் / Mango kheer receip in tamil


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)


மாம்பழ ஜாம் (Mango jam)


Mango milkshake topped with honey


🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭


Mango Phirni (Mango phirni recipe in tamil)


நட்ஸ் லட்டு(Nuts laddu)


மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)


மேங்கோ கத்லி


மாம்பழ கேசரி


சுவைமிக்க மாம்பழ ஜூஸ்


மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)


மாம்பழ கேக்


மாம்பழ குல்ஃபி (Mango kulfi recipe in tanil)


மாம்பழ குச்சி ஐஸ் (Mango Popsicles)

கமெண்ட்