ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

சின்னவங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்ச முறுக்கு எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கிலோபுழுங்கல் அரிசி
  2. 20வரமிளகாய்
  3. 2 ஸ்பூன்உப்பு
  4. 250 கிராம்பொட்டுக்கடலை
  5. 75 கிராம்உளுத்தம் பருப்பு
  6. ஒரு ஸ்பூன்ஓமம்
  7. 3 ஸ்பூன்கருப்பு எள்ளு
  8. ஒரு குழிக்கரண்டிவெது வெதுப்பான எண்ணைய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் 4 கப்(250கிராம்) ரேஷன் புழுங்கல் அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும்.பின்னர் அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்து 20 வரமிளகாயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    15 நிமிடம் ஊறிய வரமிளகாய், ஒரு ஸ்பூன் உப்பு ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு சிறிது நேரம் ஆட்டவும். ஆட்டியதும் 2 மணிநேரம் ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு இடையிடையில் தண்ணீர் தெளித்து மைய ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    அரிசி அரைவதற்குள், 250 கிராம் பொட்டுக் கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அதே மாதிரியே 75 கிராம் உளுத்தம் பருப்பையும் வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    இப்பொழுது மாவு நன்கு அரைந்துவிட்டது. தோண்டி எடுத்தராளம். தோன்றிய பிறகு அதில் நம் அரைத்து வைத்த பொட்டுகடலை மாவு,உளுந்தம் பருப்பு மாவை, ஜலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  5. 5

    சேர்த்த பிறகு,அதோடு ஒரு ஸ்பூன் ஓமம்,3 ஸ்பூன் கருப்பு எள்ளு,ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பிறகு ஒரு குழிகரண்டி அளவு வெதுவெதுப்பான எண்ணெய்யை சேர்த்த பின்னர் அதையும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

  7. 7

    பிசைந்த பின்னர் முறுக்கு பிழியும் அச்சை எடுத்து அதில் மூன்று கண்ணுள்ள தட்டை உள்ளே வைத்து ஒரு உருண்டை மாவை எடுத்து அதனுள் போட்டு ஒரு கரண்டியில் மேல் பிழிந்து விடவும்

  8. 8

    பிழிந்த பின்னர், எண்ணைய் காய்ந்ததும் கரண்டியை எண்ணெயில் வைத்தால் கரண்டியில் இருந்து முறுக்கு மாவு பிரிந்து வரும். ரொம்பவும் கலர் மாறி விடாமல் பொரித்து எடுக்கவும்.

  9. 9

    இப்போது சுவையான முறுக்கு தயார்.

  10. 10

    அடுத்து முள்ளு முறுக்கு செய்வதற்கு முறுக்குபிடியில் உள்ள தட்டை எடுத்து விட்டு, நட்சத்திர வடிவ ஓட்டை உள்ளதை போட்டு மாவை எண்ணையில் பிழிந்தால் முள்ளு முறுக்கு தயார்

  11. 11

    மூன்றாவது ரிப்பன் முறுக்குக்கு கோடு மாறி ஓட்டை இருக்கும் அதை போட்டு மாவை எண்ணையில் பிழிந்து விட்டால் ரிப்பன் முறுக்கு தயார்

  12. 12

    கெட்டியான இருக்கும் மாவை நன்கு தண்ணீர் ஊற்றி கரைத்து சிறு சிறு ஓட்டைகள் இருக்கும் கரண்டியில் மாவு தண்ணீரை ஊற்றினால் மொறுமொறு கார பூந்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes