தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
3 பரிமாறுவது
  1. 2கப் /265 கிராம்மைதா –
  2. 1 3/4கப் / 380 கிராம்சர்க்கரை -
  3. 3/4கப்எண்ணெய் –
  4. 1கப்கோகோ பவுடர் –
  5. 4முட்டை
  6. 1தேக்கரண்டிபேக்கிங் பவுடர் –
  7. 1/2 கப்ரம்
  8. 1 தேக்கரண்டிசமையல் சோடா –
  9. 1/4 தேக்கரண்டிஉப்பு –
  10. 1/8 தேக்கரண்டிஜாதிக்காய் பொடி –
  11. 1கப்சுடு நீர் –
  12. 1 தேக்கரண்டிவெனிலா எஸ்ஸென்ஸ்

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    ஓவென்ஐ 170 ” சி – 30 நிமிடத்திற்கு ப்ரீ-ஹீட் செய்யவும். பேக்கிங் தட்டில் வெண்ணை (அல்லது) எண்ணெய் தடவி,மைதா தூவி வைக்கவும்

  2. 2

    மைதா, உப்பு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், சமையல் சோடா, ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக சலித்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    எண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலங்கும்படி அடித்துக்கொள்ளவும்.அத்துடன் முட்டை ஒன்றொன்றாக எண்ணெய் கலவையுடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.

  4. 4

    இந்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் மைதா கலவை மற்றும் சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்

  5. 5

    இறுதியாக ரம்ஐ ஊற்றி கலக்கவும்.கேக் கலவை ரிப்பன் பக்குவத்தில் இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் சுடு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்க்கலாம்

  6. 6

    கேக் கலவையை மாவு தடவிய பேக்கிங் தட்டில் ஊற்றி, 30 நிமிடம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை வேகவிடவும்.

  7. 7

    பிரிட்ஜ்ல் சிறிதுநேரம் வைத்தபிறகு, இரண்டாக வெட்டி பிடித்தமான கிரீம் தடவவும்.நான் சாக்லேட் கிரீம் பிரோஸ்ட்டிங் செய்தேன்.

  8. 8

    கேக் வேகும் நேரம் ஒவொரு ஒவேணுற்கும் வேறுபடும், அதனால் 30 நிமிடத்திற்கு பிறகு, கத்தியை உள்ளே செலுத்தி சுத்தமாக வரவில்லையென்றால் இன்னும் 5 நிமிடம் வேகவிடவும்.
    ஆ) பிரோஸ்ட்டிங் செய்வதற்கு முன்பு பிரிட்ஜ்ல் வைப்பதனால் கேக் பிய்ந்துபோகாமல்,சுலபமாக வெட்டலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sharanya
sharanya @saranya2013
அன்று

Similar Recipes