மீன் முட்டை வறுவல்

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#vahisfoodcorner இது ரொம்பவும் சத்து நிறைந்த ஒன்று. ஆனால் பெரும்பாலும் நாம் மீனை மட்டும் சுத்தம் செய்து வாங்கி விட்டு அதில் இருக்கும் சேனையை(முட்டையை) வேண்டாம் என்று சொல்லி விடுவோம். இனி எந்த வகையான மீன் வாங்கினாலும் மீன் முட்டையை தனியாக கேட்டு வாங்கிட்டு வாங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 கிராம்மீன் முட்டை -
  2. -2 ஸ்பூன்எண்ணெய்
  3. 1 ஸ்பூன்கடுகு -
  4. 1 ஸ்பூன்உழுந்தம் பருப்பு -
  5. சிறதளவுகறிவேப்பிலை
  6. 6பச்சை மிளகாய் -
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1ஸ்பூன்மிளகாய் தூள் -
  9. 1ஸ்பூன்கரம் மசாலா -
  10. 100 கிராம்சின்ன வெங்காயம்-
  11. அழகுபடுத்த
  12. புதினா இலை
  13. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 250 கிராம் முட்டையை தண்ணீரில் முட்டை கொத்து கலையாமல் கழுவி கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, கை விட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பிசைந்த பிறகு, ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு ஒரு ஸ்பூன் ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    வதக்கிய பின்னர் கறிவேப்பிலை, 6 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதக்கியதும் 100 கிராம் சின்ன வெங்காயத்தை வட்டம் வடிவிலாக நறுக்கி அதனுடன் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

  5. 5

    வதக்கியதும் பிசைந்து வைத்த மீன் முட்டையை ஊற்றி கொள்ளவும்.ஊற்றியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு நிமிடம் நன்கு கிளறி கொள்ள வேண்டும்.

  6. 6

    கிளறிய பிறகு அதில் உப்பு தேவையான அளவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். (உப்பு அதிகமாக சேர்க்க கூடாது)

  7. 7

    கிளறி பிறகு அடுப்பை கம்மியான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதிக நேரம் வேகாமல் எடுத்து விட கூடாது. (அப்படி எடுத்தால் வயிற்று உபாதைகள் ஏற்படும்)

  8. 8

    10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து புதினா இலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  9. 9

    சுவையான மீன் முட்டை வறுவல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes