தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  1. 7 முட்டை
  2. 1 கப் பால்
  3. 3/4 கப் மைதா மாவு
  4. ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர்
  5. தேவையான அளவு உப்பு
  6. 2பெரிய வெங்காயம்
  7. 1தக்காளி
  8. சிறிதளவுகொத்தமல்லி இலை
  9. 1 பச்சை மிளகாய்
  10. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  12. 1/4 ஸ்பூன் மிளகு தூள்
  13. 1/4 ஸ்பூன் சீரகத்தூள்
  14. தேவையான அளவுஎண்ணெய்
  15. 50 கிராம் சீஸ்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் 2 முட்டையை உடைத்துக் கொள்ளவும் பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கப் பால் ஊற்றிக் கொள்ளவும் அதே கப்பில் முக்கால் கப் அளவு மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

  4. 4

    கட்டி இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒரு பாத்திரத்தில் 5 முட்டையை உடைத்துக் கொள்ளவும் நன்கு கலந்தவுடன் இரண்டு வெங்காயத்தை மெல்லிசாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு சிறிது சிறிதாக நறுக்கிய 1 பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி இலை, 1 தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்

  7. 7

    1/2 ஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு உப்பு, 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  8. 8

    1/4 ஸ்பூன் சீரகத்தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  9. 9

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்

  10. 10

    பிறகு கலந்த மாவை ஒரு கரண்டி ஊற்றி லோ ப்ளேமிலேயே வைத்திருக்கவேண்டும் வெந்தவுடன் முட்டைக் கலவையை ஊற்ற வேண்டும்

  11. 11

    லோ ப்ளேமிலேயே வைத்திருக்க வேண்டும் வெந்தபின் புரட்டி முன்புறத்தை வேகவிடவும்

  12. 12

    முன்புறம் வெந்தபிறகு சீஸ் சிறிது சிறிதாக நறுக்கி அதை தூவ வேண்டும் பிறகு 2 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பில் இருந்து எடுத்தபின் சூடு இருக்கும்போதே ரோல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்

  13. 13

    பிறகு அதை இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்...... சுவையான க்ரீப் எக் ரோல் ரெடி......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes