தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்காளான்
  2. 100 கிராம்முட்டைக்கோஸ்
  3. ஒன்றுபெரிய வெங்காயம்
  4. 3தக்காளி
  5. 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 2 டீஸ்பூன்தனியா தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. ஒரு டீஸ்பூன்சோயா சாஸ்
  9. 2 டேபிள்ஸ்பூன்கான்பிளவர் மாவு
  10. ஒரு டேபிள்ஸ்பூன்மைதா மாவு
  11. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  13. சிறிதளவுகொத்தமல்லி இலை
  14. ஒரு டீஸ்பூன் சோம்பு
  15. 5பூண்டு பல் பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முட்டைக்கோஸ் காளான் விதை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பவுலில் நறுக்கிய முட்டைகோஸ் நறுக்கிய வெங்காயம் இவற்றுடன் கான்பிளவர் மாவு, மைதா மாவு உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் சிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

  3. 3

    பொரித்தெடுத்த முட்டைக்கோஸ் காளான் உருண்டைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து ப்யூரியாக எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு 5 பூண்டுப் பல் பொடியாக நறுக்கி வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இதனுடன் வெங்காயம் மிளகாய்த்தூள் தனியாத்தூள் உப்பு இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    பிறகு தக்காளி ப்யூரி சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு ஒரு டீ ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கடைசியாக ஒரு ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    இந்தக் கலவையுடன் பொரித்தெடுத்த முட்டைகோஸ் மற்றும் காளான் துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்

  8. 8

    சுவையான ரோடு சைட் காளான் மசாலா தயார். இதன் மீது கொத்தமல்லி இலைகளையும் நறுக்கிய வெங்காயத்தையும் தூவி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes