தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200கிராம் முட்டைக்கோஸ்
  2. 1+1\2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1\2+1\2ஸ்பூன் கரம் மசாலா
  4. 1டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு
  5. 1டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  6. 2 பெரிய வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 1துண்டு இஞ்சி
  9. 5பூண்டுபல்
  10. தேவையான அளவு எண்ணெய்
  11. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முட்டைக்கோசை நைசாக நறுக்கி நன்கு கழுவி தண்ணீர் பிழிந்து, எடுத்துக்கொண்டு மைதா மாவு, கார்ன்ஃப்ளார், 1ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்

  2. 2

    பிறகு 1\2ஸ்பூன் கரம் மசாலா தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்

  3. 3

    சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயவிடவும்

  4. 4

    முட்டைக்கோசை சிறிது சிறிதாக போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்

  5. 5

    பிறகு மீதமிருக்கும் எண்ணெயில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடவும். இதனுடன் 1\2ஸ்பூன் மிளகாய்த்தூள், 1\2ஸ்பூன் கரம் மசாலா தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்

  6. 6

    மசாலா பச்சை வாடை போக நன்கு வதக்கி விட்டு பிறகு மிக்ஸி ஜாரில் ஒரு தக்காளி, ஒரு துண்டு இஞ்சி, 5 பூண்டுப் பல் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும்

  7. 7

    பிறகு முட்டைகோஸ் பொரித்தது போக அதன் அடியில் இருக்கும் தண்ணீர் அதாவது மீதமுள்ள மைதா, கார்ன்ஃப்ளார் கரைசலை ஊற்றவும்

  8. 8

    அனைத்தையும் ஒரு சேர வதக்கி விட்டு மிதமான தீயிலேயே எண்ணெய் பிரியும் வரை வைத்து இறுதியாக பொரித்த முட்டைக்கோசை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes