தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. 300 கிராம் கேரட்
  2. 100 கிராம் சர்க்கரை
  3. 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  4. 5 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 8 முந்திரி
  6. 5 பாதாம் மற்றும் பிஸ்தா

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி விட்டு சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். பிறகு இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் பொடியாக்கிய கேரட்டை சேர்த்து மேலும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கேரட் வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். கால் கப் நீர் விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

  3. 3

    பால் பவுடரை சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும். பிறகு சர்க்கரையை சேர்த்து நீர் வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இடையிடையே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்துக் கொள்ளவும். நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பிறகு வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes