எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. 1 எலுமிச்சைப்பழ அளவு புளி
  2. மூன்று முருங்கைக்காய்
  3. ஒரு பெரிய தக்காளி
  4. ஒரு பெரிய வெங்காயம்
  5. 2 டீஸ்பூன் மிளகாய் பொடி
  6. 4 ஸ்பூன் தனியா பொடி
  7. அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி
  8. 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. அரை டீஸ்பூன் கடுகு
  10. அரை டீஸ்பூன் சீரகம்
  11. அரை டீஸ்பூன் வெந்தயம்
  12. தேவையான அளவுஉப்பு
  13. மசாலா அரைக்க
  14. பத்து சின்ன வெங்காயம்
  15. ஒரு பெரிய தக்காளி
  16. 15 பல் பூண்டு
  17. ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  18. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
  19. இரண்டு ஸ்பூன் தனியா
  20. அரை ஸ்பூன் மிளகு
  21. கால் டீஸ்பூன் வெந்தயம்
  22. அரை ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    புளியை ஒரு கப் நீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மேலும் 2 கப் நீர் விட்டு கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை சூடாக்கி ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விட்டு, மசாலா அரைக்க கொடுத்துள்ளவற்றில் வெங்காயம், தக்காளி, பூண்டு தவிர மற்றவற்றை சேர்த்து வறுபட்டவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  2. 2

    பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆறவிடவும். பின்பு மிக்ஸியில் இதை மைய அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், வெந்தயம் இவற்றை சேர்த்து வறுபட்டவுடன் கருவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  4. 4

    பின்பு புளித்தண்ணீரை ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து மேலும் 2 கப் நீர் விட்டு கலந்து கொதிக்கவிடவும்.

  5. 5

    அதிக தீயில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் கொதித்து முருங்கைக்காய் வெந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவில் அரை டம்ளர் நீர் விட்டு கரைத்து குழம்பில் ஊற்றவும். மசாலாவை ஊற்றியவுடன் குழம்பு கெட்டியாகி விடும். மேலும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான முருங்கைக்காய் அரைத்துவிட்ட குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes