ரோட்டு கடை எம்டி சால்னா (Empty salna recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 3பெரிய வெங்காயம்
  2. 2தக்காளி
  3. 3பச்சை மிளகாய்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1 கப்தேங்காய் துருவல்
  6. 1 ஸ்பூன்சீரகம்
  7. 1 ஸ்பூன்சோம்பு
  8. 1 ஸ்பூன்பொட்டுக்கடலை
  9. 5முந்திரி
  10. 6ஏலக்காய்
  11. 6பட்டை
  12. 6கிராம்பு
  13. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  14. 1 ஸ்பூன்மல்லி தூள்
  15. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  16. சிறிதளவுகறிவேப்பிலை
  17. சிறிதளவுகொத்தமல்லி
  18. உப்பு
  19. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும். பிறகு துருவிய தேங்காய்,பொட்டுக்கடலை,சீரகம்,சோம்பு,ஏலக்காய் 3,கிராம்பு3,பட்டை3,முந்திரி சேர்த்து நல்ல மையமாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய் 3 கிராம்பு 3 பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக மாறும் பு பிறகு அதில் மிளகாய் தூள் மல்லித் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    அதில் தக்காளி சேர்த்து வதக்கவும், வெங்காயம் தக்காளி ஒன்றாக சேர்ந்த பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா வை அதோடு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. 4

    தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பின் உப்பு சேர்த்து சால்னா வை நன்கு கொதிக்க விடவும். தயார் ஆனதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.சுவையான ரோட்டு கடை எம்டி சால்னா தயார். இதை பரோட்டா,சப்பாத்தி வைத்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes