முட்டை மசாலா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

magazine 6
#nutrition
மிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் சமைக்கக் கூடிய கிரேவி முட்டையில் புரோட்டீன் அதிகம் இப்போது இருக்கும் corona சூழ்நிலையில் தினம் 1 க்கு 1 முட்டை கண்டிபாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிட வேண்டும் மாவுசத்து அதிகம் என்பதால் முட்டையை அவித்து சாப்பிடுவதே சிறந்தது ஒரே மாதிரியாக கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது எனவே குழம்பு , கிரேவி , மசாலா என்று கொடுக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 5 முட்டை
  2. 10 சின்ன வெங்காயம் (or)
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 5 கிராம்பு,
  6. 1 ஏலக்காய்
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1/4 ஸ்பூன் சீரகம், சோம்பு
  9. 1 1/2 ஸ்பூன் முட்டைகறிமசாலா
  10. 1/2 ஸ்பூன் உப்பு
  11. 100 ml நல்லெண்ணெய்
  12. தேவைக்கேற்ப முட்டை அவிக்கவும், மசாலாவில் ஊற்ற சிறிதளவு தண்ணீர்
  13. கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, மல்லி, புதினா

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தையும், தக்காளியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பின் தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் 5 முட்டையை எடுத்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர்ச் சேர்த்து பின் 1/4 ஸ்பூன் உப்புச் சேர்த்து முட்டையே 5 நிமிடம் வேக வைக்கவும் பின் தோல் உறித்துக் கொள்ளவும்

  3. 3

    பின் ஒருக்கடாயில் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 5 கிராம்பு, 1 ஏலக்காய்ச் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    பின் 1 பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம் 1/4 ஸ்பூன் உப்புச் சேர்த்துக் கொண்டு வதக்கவும்

  5. 5

    அதில் 1/4 ஸ்பூன் சீரகம், சோம்பு 2 தக்காளியைச் சேர்த்து வதக்கவும்

  6. 6

    நன்றாக வதங்கியதும் 1 1/2 முட்டை கறிமசாலாத்தூளை சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்

  7. 7

    பின் சிறிதளவு தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் அதில் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, மல்லி, புதினாச் சேர்க்கவும்

  8. 8

    மசாலா நன்றாக கொதித்து வந்தவுடன் 2 ஆக வெட்டிய முட்டையேச் சேர்க்கவும்

  9. 9

    கொதிக்கவும் இறக்கி பரிமாறவும் சுவையான முட்டை மசாலாத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes

More Recommended Recipes