தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 பேர்
  1. 3முட்டை
  2. 2 தக்காளி
  3. 3பெரிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. சிறிதளவு கறிவேப்பிலை
  6. சிறிதளவு கொத்தமல்லி
  7. இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. ஒரு ஸ்பூன் மல்லித் தூள்
  9. 1/2 ஸ்பூன் சோம்பு தூள்
  10. தாளிக்க.
  11. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  12. 1/2 ஸ்பூன் சோம்பு
  13. சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட்
  14. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் முட்டையை எடுத்து தண்ணீரில் போட்டு அவித்து, தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு இரண்டு தக்காளி எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதேபோல வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த விழுதுகளை தனியா பாத்திரத்தில் மாற்றவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் சோம்பு போடவும்.

  4. 4

    அதோடு வெந்தயம்., கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

  5. 5

    அரைத்த தக்காளியையும் வெங்காயத்தையும் அதில் சேர்த்து வதக்கி ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்

  7. 7

    முட்டையை பாதியாக வெட்டி வைக்கவும். நன்றாக தண்ணி ஊற்றி வேக வைக்கவும்.

  8. 8

    மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
    மசாலாவில் வெட்டி வைத்த முட்டையை போடவும். முட்டை உடையாமல் பிரட்டி விட்டு கொத்தமல்லி தூவவும்.

  9. 9

    கடைசியாக இறக்கும் பக்குவத்தில் மிளகு சீரகம் நச்சு அதில் தூவி இறக்கவும். முட்டை மசால் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes