நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. தாளிக்க
  2. தேவைக்கேற்ப நல்லெண்ணெய்
  3. 1/2 தேக்கரண்டி சோம்பு
  4. 2 கொத்து கருவேப்பிலை
  5. 25-27சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  6. அரைக்க
  7. 7 கீத்து தேங்காய்
  8. 10பல் பூண்டு
  9. 2தேக்கரண்டி மிளகு
  10. 1 தேக்கரண்டி சீரகம்
  11. 1 தேக்கரண்டி சோம்பு
  12. மசாலா பொடிகள்
  13. 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  14. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. மற்றவை
  16. 2 தக்காளி
  17. 3/4 கி நண்டு
  18. தேவைக்கேற்ப உப்பு
  19. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சட்டிய அடுப்புல வச்சு நல்லெண்ணெய்(நண்டு சூடுங்க, அதான் நல்லெண்ணெய்) விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொறிஞ்சதும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

  2. 2

    இரண்டு தக்காளி அரைச்சு ஊத்தி வதக்கனும்

  3. 3

    அரைக்க கொடுத்த பொருள அரைச்சு சேர்த்து வதக்கி., மசாலா பொடிகள் போட்டு வதக்கவும்

  4. 4

    நண்டு போட்டு கிளறி, மூழ்குற அளவு தண்ணீர் விட்டு கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும்..

  5. 5

    அருமையான சுவையான நண்டு கிரேவி தயார்..

    ஆனந்தமாக சாப்பிடுங்க..
    ஆரோக்கியமா இருங்க...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

Similar Recipes