செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#family
#nutrient3
நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோ நண்டு
  2. 100சின்னவெங்காயம்(பொடியாக நறுக்கியது)
  3. 2பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது)
  4. 2தக்காளி (பொடியாக நறுக்கியது)
  5. 1/4டீஸ்பூன் கடுகு
  6. 2வரமிளகாய்
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. சிறிதளவுஎண்ணெய்
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/4டீஸ்பூன்மிளகாய் தூள்
  12. 1/4டீஸ்பூன் மல்லித்தூள்
  13. 1டீஸ்பூன் சோம்பு
  14. மசாலா அரைக்க ::
  15. 1பட்டை
  16. 3ஏலக்காய்
  17. 1கிராம்பு
  18. 1/4டீஸ்பூன் சோம்பு
  19. 1/4டீஸ்பூன் சீரகம்
  20. 1/2டீஸ்பூன் மிளகு
  21. 1/2டீஸ்பூன் தேங்காய் துருவல்
  22. 1/4டீஸ்பூன் தனியா
  23. 2வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து பட்டை,ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, மல்லி சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவைக்கவும்.

  2. 2

    பின் அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். பின் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    நன்றாக வதங்கியதும் நண்டு சேர்க்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து கிண்டவும்.

  4. 4

    அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நண்டை 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

  5. 5

    நண்டு வெந்ததும் கிளறி விட்டு மல்லிஇலை சேர்த்து இறக்கவும். சுவையான செட்டிநாடு நண்டு மசாலா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes