* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இது மாங்காய் சீசன்.மாங்காயில், விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.அனைவரும் மிகவும் விரும்பக் கூடியது.எடையைக் குறைக்கவும், பசியை தூண்டும் உதவுகின்றது.வைட்டமின் சி உள்ளதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
12 பேர்
  1. 1 கிலோஓட்டுடன் பெரிய துண்டுகளாக வெட்டிய புளிப்பு நீலம் மாங்காய்
  2. 2 டம்ளர்தனி மி.தூள்
  3. 2 ஸ்பூன்வெந்தயம்
  4. 3 டம்ளர்ந.எண்ணெய்
  5. 1 டம்ளர்கல் உப்பு பொடித்து
  6. 1 டம்ளர்கடுகு பொடி
  7. 2 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    மாங்காயை சுத்தம் செய்து,காய்ந்ததும், நன்கு துடைத்து, ஓட்டுடன், பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    மாங்காயுடன், வெந்தயத்தை சேர்க்கவும்.

  4. 4

    பின் மி.தூள் சேர்க்கவும்.சிறிய மிக்ஸி ஜாரில் கடுகை போடவும்.

  5. 5

    பின், நன்கு பொடித்து, டப்பாவில் எடுக்கவும்.

  6. 6

    மிக்ஸி ஜாரில், கல் உப்பை பொடித்துக் கொள்ளவும்.

  7. 7

    மாங்காயுடன், மி.தூள் சேர்த்ததும், கடுகு பொடியை, போட்டு, நன்கு கலந்து விடவும்.

  8. 8

    பிறகு உப்பை போடவும்.அடுத்து, ந.எண்ணெயை விடவும்.

  9. 9

    பின், பெருங்காயத் தூள் போட்டு, மரக் கரண்டியால் நன்கு கலந்து, காற்று புகாத கன்டெயினரில் எடுக்கவும்.

  10. 10

    இப்போது, மிகவும் காரசாரமான,* ஆந்திரா சைடு ஆவக்காய் ஊறுகாய்* தயார்.இது, தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.ஊறுகாயின் விழுதை சுடு சாதத்தில், நெய்(அ)ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால், மிக சுவையாக இருக்கும்.முயற்சிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes