முட்டை மஞ்சூரியன்

Navas Banu
Navas Banu @cook_17950579

# முட்டை உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3முட்டை -
  2. 1/2 டீ ஸ்பூண்பெப்பர் பொடி -
  3. தேவைக்குஉப்பு
  4. 2வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. 2 ஸ்பூண்கடலை மாவு
  6. 1 ஸ்பூண்அரிசி மாவு
  7. 1தக்காளி
  8. 1 ஸ்பூண்இஞ்சி பூண்டு விழுது
  9. 2பச்சை மிளகாய் நறுக்கியது
  10. 2தக்காளி நறுக்கியது
  11. 1/2 ஸ்பூண்மிளகாய் பொடி
  12. 1/2 ஸ்பூண்கரம் மஸாலா பொடி
  13. 1/2 ஸ்பூண்மஞ்சள் பொடி
  14. 2 டேபிள் ஸ்பூண்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பெப்பர் பொடி,உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அகன்ற கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்டிலி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  3. 3

    வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும்.

  5. 5

    இதில் முட்டை துண்டுகளை போட்டு நன்றாக புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  6. 6

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  7. 7

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  8. 8

    தக்காளி சேர்த்து வதக்கவும்.

  9. 9

    மிளகாய் பொடி,மஞ்சள் பொடி,கரம் மஸாலாப் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  10. 10

    பச்சை மணம் மாறியதும், பொரித்த முட்டை துண்டுகளை சேர்த்துக் கிளறவும்.

  11. 11

    ஒரு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அடித்து இதனுடன் சேர்க்கவும்.

  12. 12

    தண்ணீர் நன்றாக வற்றி மஸாலா இறுகி வரும் போது இறக்கவும்.

  13. 13

    சுவையான முட்டை மஞ்சூரியன் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes